வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:09

-அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் பகுதியில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் இணைந்து அச்சுந்தன் வயல் கிராமத்தில் வயல் ஆய்வு செய்தனர்.



வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ், துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன், பூச்சியியல் துறை உதவிபேராசிரியர் இளஞ்செழியன் பருத்தி செடிகளில் வேர் வாடல் நோய், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை ஆய்வு செய்தனர். உழவியல், ரசாயன பரிந்துரைகள், மேம்படுத்தப்பட்ட பயிர்சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனைகளை கூறினர்.



வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், அலுவலர் முத்துக்குமார், அட்மா திட்ட மேலாளர் சூர்யா, அச்சுந்தன்வயல், நொச்சிவயல், முதுனால் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X