கிடப்பில் எழும்பள்ளம் குடிமராமத்து பணி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கிடப்பில் எழும்பள்ளம் குடிமராமத்து பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:37

கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் குளம் குடிமராமத்து பணி ஓராண்டுக்கு மேலாகியும் கிடப்பில் உள்ளது.



இக்குளம் மூலம் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். சில ஆண்டுகளுக்கு முன் குளத்தை தூர்வாரி மேம்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆட்சியின் போது ரூ.90 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்காக பாசன விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் பூமி பூஜையுடன் பணிகளை துவங்கின.



இத்திட்டத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் பணியை தங்கள் வசப்படுத்தி லாப நோக்குடன் செயல்பட அமைச்சர்கள் மூலம் முட்டுக்கட்டை போட்டனர். ஆயகட்டு பாசன விவசாயிகள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட போதும், அ.தி.மு.க.,வினர் எதிர்த்தரப்பு சங்கத்தை தங்கள் நிர்வாகிகள் மூலம் உருவாக்கி பிரச்னையை ஏற்படுத்தியதால் பணிகள் முடங்கின.



குடிமராமத்து பணியில் உள்ள இடையூறுகளை களைந்து உண்மையான விவசாய சங்கத்தை கண்டறிந்து அதற்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இன்னும் இதற்கான முயற்சிகளை எடுக்காததால் நிதி திரும்பும் அபாயம் உள்ளது.குடிமராமத்து பணிக்கான விவசாய சங்கத்தினரை தேர்தல் மூலம் தேர்வு செய்யவேண்டும். தற்போது பணிகள் துவங்கும் பட்சத்தில் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து பாசனம் செய்ய ஏதுவாக அமையும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X