திண்டுக்கல்லில் பக்ரீத் தொழுகை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
திண்டுக்கல்லில் பக்ரீத் தொழுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:39

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடந்தது.



திண்டுக்கல்லில் மதுரை ரோடு பெரிய பள்ளி வாசலில் தலைமை ஹாஜி அபுபக்கர் தொழுகையை நடத்தி வைத்தார்.அதே போல் முகமதியாபுரம், சந்துக்கடை, நாகல்நகர், வேடபட்டி பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து, ஏழை எளியோருக்கு குர்பானி வழங்கினர்.



* சித்தையன்கோட்டை, செம்பட்டி, கன்னிவாடி பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.* பழநி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனூர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் உலக நன்மைக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X