ஏலத்தோட்ட பணிக்கு வருவோரை தங்கவைக்க முதல்வர் அறிவுரை | தேனி செய்திகள் | Dinamalar
ஏலத்தோட்ட பணிக்கு வருவோரை தங்கவைக்க முதல்வர் அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:40

மூணாறு : '' இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டப்பணிகளுக்கு எல்லை கடந்து வருவோரை அங்கேயே தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் ,''என, கேரள முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்தார்.



அவர் தலைமையில் திருவனந்தபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அவர் கூறியதாவது: மாநிலத்தில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு தொடரும். கொரோனா பாதிப்பு சதவீதத்திற்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் ஊரடங்கை செயல்படுத்தும் பொறுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. மலப்புரம், கோழிகோடு, காசர்கோடு மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.



அதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்ட பணிகளுக்கு எல்லை கடந்து வருவோரை அங்கேயே தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும், என்றார்.-----------

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X