குமுளி மலைப்பாதையில் தேசிய பேரிடர் மீட்பு படை | தேனி செய்திகள் | Dinamalar
குமுளி மலைப்பாதையில் தேசிய பேரிடர் மீட்பு படை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:41

கூடலுார் : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமுளி மலைப்பாதையை பார்வையிட்டனர்.



தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களாக தீவிரமடைந்துள்ளது. கேரளா இடுக்கி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்'விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து 'எல்லோ அலர்ட்' விடப்பட்டிருந்தது. இதனால் தேனி மாவட்ட எல்லைப்பகுதியான குமுளி மலைப்பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று தேசிய பேரிடர் மீட்புப் படை இன்ஸ்பெக்டர் கணேஷ் பிரசாத், எஸ்.ஐ., உமேஷ்கண்டி ஆகியோர் தலைமையில் பார்வையிட்டனர்.



லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் பகுதிகள், வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளை கண்டறிந்தனர்.கூடலுார் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X