அதிகரிக்கும் நாய்க்கடி; 5 நாட்களில் 15 பேர் காயம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
அதிகரிக்கும் நாய்க்கடி; 5 நாட்களில் 15 பேர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:43

செம்பட்டி : செம்பட்டியில் வெறிநாய் கடித்ததில் 5 நாட்களில் குழந்தைகள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர்.



செம்பட்டி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று வெறிநாய் கடித்ததில் பழைய செம்பட்டி அழகரின் 3 வயது மகள் சுகன்யா ஸ்ரீ, கூலித்தொழிலாளி சஞ்சீவ்குமார் 21, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சமீப காலமாக நாய் கடித்து மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் குழந்தைகள் உள்பட 15- க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததில் காயமடைந்துள்ளனர்.



வட்டார மருத்துவ அலுவலர் பரத் கண்ணன் கூறுகையில்,''நாய்க்கடி தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளன. ஒரே நாய் அதிக நபர்களை கடிப்பதால் மட்டுமே பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். வட்டார அளவில் பாதிப்பு விபரம் சேகரித்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்'', என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X