டி.சுப்புலாபுரம் சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா | தேனி செய்திகள் | Dinamalar
டி.சுப்புலாபுரம் சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:46

ஆண்டிப்பட்டி : டி.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கிராமத்தை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் போதுமான மருத்துவ வசதி கிடைப்பதில்லை.



அவசரத் தேவைக்கு ஐந்து கி.மீ. தூரம் உள்ள ஆண்டிபட்டி அல்லது 10 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்ல வேண்டி உள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X