கொரோனா நிவாரண தொகை ரூ.286 கோடி வழங்கல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
கொரோனா நிவாரண தொகை ரூ.286 கோடி வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
18:39

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, இரண்டு தவணைகளில், 286 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரத்துக்காக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரண்டு தவணையாக தலா, 2,000 வீதம், 4,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டப்படி ஈரோடு மாவட்டத்தில், 286.29 கோடி ரூபாய் நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து, 15 ஆயிரத்து, 273 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணை நிதியாக தலா, 2,000 வீதம், 142.78 கோடி, இரண்டாம் தவணையாக தலா, 2,000 ரூபாய் மற்றும், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X