38 நாட்களுக்குப்பின் மீண்டும் அதிகரித்த 'கொரோனா' | ஈரோடு செய்திகள் | Dinamalar
38 நாட்களுக்குப்பின் மீண்டும் அதிகரித்த 'கொரோனா'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
18:43

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 38 நாட்களுக்குப்பின் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததுடன், நால்வர் இறப்பும் ஏற்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் முதல் அலையில் அதிகபட்சமாக, 278 பேரும், இரண்டம் அலையில், 1,746 பேரும் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நிலவரப்படி, 129 பேர் புதிதாக பாதித்து, மொத்த பாதிப்பு, 92 ஆயிரத்து, 189 என்றானது. குணமடைந்தோர் எண்ணிக்கை, 89 ஆயிரத்து, 550 என்றானது. நேற்று முன்தினம் நால்வர் இறந்ததால், இதுவரை இறந்தோர் எண்ணிக்கை, 623 என்றானது. ஆனால் கடந்த, 16 முதல் 20 வரை தினமும் பாதித்தோர் எண்ணிக்கை முறையே, 152, 143, 128, 122, 129 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை முறையே, 231, 224, 216, 237, 208 என்றும், இறந்தோர் எண்ணிக்கை, 16ல் 2, 17 ல் 0, 18 ல் 1, 19 ல் 0, 20ல் 4 என்றானது. கடந்த, 38 நாளாக குறைந்த கொரோனா தொற்று நேற்று முன்தினம், 7 என்ற எண்ணிக்கை அதிகரித்து, இறப்பும், நான்கு என உயர்ந்துள்ளது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரத்துறை, வருவாய் துறை, போலீஸ், உள்ளாட்சி அமைப்பினரை வைத்து மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, அபராதம், சீல் வைப்பு நடவடிக்கையை தொடர வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X