மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி | ஈரோடு செய்திகள் | Dinamalar
மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
18:44

அந்தியூர்: அந்தியூர் அருகே, ஜி.எஸ்.காலனியை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தந்தைக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஐந்து பேருக்கும் இடையே நடைபாதை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், தந்தையை தகராறு செய்ய வேண்டாம் என, அவரது மகள் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு தந்தை வராததால், மனமுடைந்த அவரது மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அந்தியூர் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X