மாவட்டத்தில் இன்று 22,000 பேருக்கு தடுப்பூசி | சேலம் செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் இன்று 22,000 பேருக்கு தடுப்பூசி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
18:50

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிஷீல்டு தடுப்பூசி, 22 ஆயிரம் ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளதால், மாவட்டத்தில், ஜூலை, 22ல்(இன்று), 138 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. சேலம் சுகாதார மாவட்டத்துக்கு, 9,900, நிறுவனங்களுக்கு, 1,500, ஆத்தூர் மாவட்டத்துக்கு, 4,750, மாற்றுத்திறனாளிக்கு, 750, சேலம் மாநகராட்சி, 5,100 என, 22 ஆயிரம் பேர், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதால், முக கவசம், சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X