எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணம், தங்க காசு அபேஸ் | சேலம் செய்திகள் | Dinamalar
எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணம், தங்க காசு அபேஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:00

ஆத்தூர்: ஆத்தூர், ராணிப்பேட்டையில், 'தனியார்' எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. நேற்று, மேலாளர் சந்திரமோகன் கடையை திறந்தபோது, பொருட்கள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆத்தூர் டவுன் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கல்லா பெட்டியை உடைத்து, 80 ஆயிரம் ரூபாய்; தலா, 250 மில்லி கிராம் எடையில், 8 தங்க காசுகள், 10க்கும் மேற்பட்ட மொபைல் போன் திருடுபோனது தெரிந்தது. கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது செயல்படவில்லை. தனி அறையில் கணினியுடன் இணைத்திருந்த, கேமரா வீடியோ பதிவாகும், 'ஹார்டு டிஸ்க்'கை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. மோப்ப நாய் லில்லி, கைரேகை நிபுணர்களும் வந்தனர். விசாரணையில், மூன்றாம் மாடி கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரிந்தது. போலீசார், மர்ம நபர்களை தேடுகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X