காதல் விவகாரத்தில் தாக்குதல்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை | சேலம் செய்திகள் | Dinamalar
காதல் விவகாரத்தில் தாக்குதல்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:01

வாழப்பாடி: சேலம், அயோத்தியாப்பட்டணம், மலை நகரை சேர்ந்தவர் மகேஷ். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன், 31. இருவரும், அதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்தனர். முருகன், அப்பெண்ணிடம் காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால், மகேஷ், தன் நண்பர் ராஜ்குமார் மூலம், முருகனை பேச தனியாக அழைத்தார். அதன்படி நேற்று, அயோத்தியாப்பட்டணம், ராமர் கோவில் பகுதிக்கு அழைத்து வந்த முருகனை, நேற்று, மகேஷ், அவரது நண்பர்கள் ராஜ்குமார், பிரவீன், அப்பெண்ணின் அண்ணன் பூவரசன் ஆகியோர் சேர்ந்து தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின், நான்கு பேர் கும்பல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக, காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதனால், ராமர் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 23, என்பவரை, கைது செய்த போலீசார், மற்ற மூவரை தேடுகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X