போலீசாரின் கடும் எச்சரிக்கையால் வீசிச்சென்ற 30 நாட்டுத்துப்பாக்கிகள் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
போலீசாரின் கடும் எச்சரிக்கையால் வீசிச்சென்ற 30 நாட்டுத்துப்பாக்கிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:07

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களில் வீசி செல்லப்பட்ட, 30 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டத்தின், பல பகுதிகள் மலை கிராமங்களை சார்ந்த பகுதிகளாக உள்ளன. இங்கு பலர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இதனால், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி வைத்துள்ளவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்காவிடில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் எச்சரித்தார். இதையடுத்து, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகள் வீசி செல்வது தொடர்கிறது. இதுகுறித்து, தர்மபுரி எஸ்.பி., கலைச்செல்வனிடம் கேட்டபோது, ''அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவோர், தங்கள் பகுதியிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும். அதை மீறி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு மாதத்தில் ஆங்காங்கே வீசி செல்லப்பட்ட, 30 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன,'' என்றார்.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X