தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:10

தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட தே.மு.தி.க., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், மாநில அவைத்தலைவர் இளங்கோவன் பேசியதாவது: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், 69வது பிறந்தநாள் விழா, அடுத்த மாதம், 25ல் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் மூன்றாம் அலையை தடுப்பது குறித்து, அவரவர்களின் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அனைத்து கிராம மற்றும் நகர்புறங்களில், விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்த வேண்டும். கிராமப்புறங்களில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை, பஞ்., நிர்வாகம் முறையாக மேற்கொள்கின்றனவா என கேட்டறிந்து, அதற்கான ஏற்பாடுகளை, செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X