பக்ரீத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | தர்மபுரி செய்திகள் | Dinamalar
பக்ரீத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:12

தர்மபுரி: பக்ரீத் பண்டிகையையொட்டி, மசூதிகளில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகை, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தர்மபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில், தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரை அருகிலுள்ள ஈத்கா மைதானத்தில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு தொழுகை நடத்த அனுமதி வழங்கவில்லை. இதனால், அந்தந்த மசூதிகளில் தொழுகை நடத்த, கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தர்மபுரி டேக்கிஸ்பேட்டை, முகமதுஅலி கிளப்ரோடு, மதிகோண்பாளையம் உள்ளிட்ட இடங்களிலுள்ள மசூதிகளில் நேற்று, சிறப்பு தொழுகை நடந்தது.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளதால், ஈத்கா மைதானத்தில் தொழுகை செய்யாமல் தங்கள் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் மசூதிகளில் தொழுகை செய்தனர். மேலும், அசைவு உணவுகளை சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்து, பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X