பொக்லைன் உரிமையாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
பொக்லைன் உரிமையாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:18

கிருஷ்ணகிரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பொக்லைன் வாகனங்களை இயக்காமல் இரண்டு நாள் போராட்டம் நடக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, பொக்லைன் உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர், இரண்டு நாள் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலீல், சோமு, பைரேசன் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், 50க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் பணிக்கு கொண்டு செல்லாமல், ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இவற்றை கட்டுப்படுத்தாமல், அரசு வேடிக்கை பார்க்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எங்களால் வாகனங்களையும் இயக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும்' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X