ரூ.600 கோடி மெகா மோசடி? பா.ஜ., நிர்வாகி தலைமறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:19

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக, பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வருகின்றனர்.



திருவாரூர் மாவட்டம், மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ்-, 50; சுவாமிநாதன், 47. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வசிக்கின்றனர். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை வைத்துள்ளனர். வெளிநாடுகளிலும் தொழில் செய்து வரும் இவர்கள், சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். கணேஷ், பா.ஜ., கட்சியின் வர்த்தக பிரிவில் பொறுப்பில் இருந்தார். இவர்களுக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்து, பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜன்டுகள் நியமித்து, அவர்களுக்கு கமிஷன் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கோடிக்கணக்கில் பணம் செலுத்திய பலருக்கும், கொரோனாவை காரணம் காட்டி, பணத்தை முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - - பைரோஜ் பானு தம்பதி, கணேஷ், சுவாமிநாதன், 15 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக, தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயி டம் கடந்த வாரம் புகார் அளித்தனர். டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தனர். மேனேஜர் ஸ்ரீகாந்தன் என்பவரை கைது செய்த போலீசார், நேற்று காலை கணேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். கணேஷ், சுவாமிநாதன் மற்றும் இருவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். இதற்கிடையே, கும்பகோணத்தில், 600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியவர்கள் யார் எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.


பதவி பறிப்பு: கணேஷ் மீது புகார்கள் வருவதால், அவரை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பதாக, மாவட்ட பா.ஜ., தலைவர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X