கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்வு; தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்வு; தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:23

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 46 அடியை தாண்டியதால், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் பெய்யும் மழையால், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து கடந்த, 15 நாட்களாக தினமும், 400 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 12ல் வினாடிக்கு, 166 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம், 324 கன அடியாக அதிகரித்த நிலையில், நேற்று, 290 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 46.55 அடி நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து வழக்கம்போல், 12 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 46 அடியை தாண்டியுள்ளதால், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X