மணல் குவாரி திறந்தால் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: கூட்டமைப்பு தலைவர் தகவல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
மணல் குவாரி திறந்தால் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: கூட்டமைப்பு தலைவர் தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
19:25

நாமக்கல்: ''தமிழகத்தில், மணல் குவாரிகளைத் திறந்தால், அரசுக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.


தமிழகத்தில், உடனடியாக அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மணலுக்காக காத்திருக்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது.


கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், மணலுக்காக காத்திருப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும், நான்கு ஆண்டுகளாக, அரசு மணல் வழங்கவில்லை. அதனால், கட்டுனமாப் பணிகள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. மணல் கிடைக்காமல், சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, எம்.சாண்ட் பயன்படுத்தக் கூறியது. ஆனால், அதற்கான எந்த தரக்கட்டுப்பாடு வழிமுறையையும் தெரிவிக்கவில்லை. எம்.சாண்ட் தரம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு கூட அமைக்கப்பட வில்லை. பொதுமக்கள் மணலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. அரசு மணல் குவாரியை துவங்கினால், அரசுக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆறுகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஆட்கள் மூலம் மணல் எடுக்க, நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு, மணல் கடத்தலில் ஈடுபட மாட்டோம் என, உறுதி அளிக்கிறோம். விரைவில், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என, முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X