மலைவேம்பு கிராமங்களில் விளையுது பணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
00:42

பழநி : பரந்து விரிந்த காடுகளை மட்டுமல்ல இந்த பூமிப்பந்தையே வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப பராமரிப்பது பசுமையின் அடையாளமாக வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களே. இந்த மரங்களால் மனித சமுதாயம் பெறும் பலன்கள் கொஞ்சநஞ்சமல்ல.



மரங்களில் சவுக்கு, மலைவேம்பு, சந்தனவேம்பு, தான்றிகாய், கடுக்காய், பலா, புளி போன்ற 20க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து காடுகளை பசுமை மாறாது பராமரிக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நாட்டு வகை மரக்கன்றுகளை பட்டா நிலங்களில் வளர்க்க தருகின்றனர். இதனால் விவசாயிகளின் மாற்று விவசாயத்தில் மரக்கன்றுகள் நடவு முக்கியமானதாக உள்ளது.



மலைவேம்பு விவசாயம்



மலைவேம்பு, தான்றிக்காய், கடுக்காய் போன்றவை சித்த மருத்துவ மூலிகை பொருட்களை வழங்குகிறது. இவற்றில் மலைவேம்பு மரம் மூலிகைக்காக மட்டுமின்றி தீக்குச்சி, காகிதம், பிளைவுட் போன்றவை தயாரிக்கவும் மூலப்பொருளாக அதிகளவில் பயன்படுகிறது.இந்த மரங்களை சாகுபடி செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம். தென்னை, கொய்யா மரங்களை விட பராமரிப்பு செலவும் குறைவாகவே தேவைப்படுகிறது. இதனால் பழநி பகுதியில் மலைவேம்பு மரங்கள் நடும்போக்கு உருவாகி வருகிறது.



பழநி, காரைக்குடி, ஈரோடு உட்பட பல பகுதிகளில் இவை வளர்க்கப்படுகின்றன.மலைவேம்பு விவசாயத்தில் நாட்டு மரங்கள், 'ஹைபிரட்' மரங்கள் உள்ளன. நாட்டு மரங்களில் பூ, காய் கிடைக்கும். ஆனால் ஹைபிரேட் மரம் அளவுக்கு வேகமான வளர்ச்சி இருக்காது. நாட்டு மரங்களுக்கு 15 ஆண்டுகள். ைஹபிரட் மரங்களோ 7 ஆண்டுக்குள் வளர்ந்துவிடும்.இவை தண்ணீர் வசதி உள்ள இடத்தில் விரைவாக வளரும். நாற்று நட்டபின் ஓராண்டுக்கு கவாத்து பணிகள், தண்ணீர் பாய்ச்சுதல், பாதுகாப்பு முறையாக செய்ய வேண்டும். 7 முதல் 10 ஆண்டுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு வந்துவிடும்.



ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய சொட்டுநீர் பாசன செலவுடன் ரூ.70 ஆயிரம் முதல் செலவாகும். நாற்றுகளுக்கு ஏக்கருக்கு ரூ.5000 செலவு ஏற்படும். முதல் இரண்டு வருடங்கள் வரை இதில் ஊடுபயிராக சுரை, பூசணி போன்ற கொடி வகையை பயிரிட்டு பயன்பெறலாம். அதன்பின் நிழல் விழும் என்பதால் ஊடுபயிரில் விளைச்சல் குறைவு ஏற்படும்.ஒரு மரம் குறைந்தபட்சம் உயரம் 20 அடிக்கு மேலும், சுற்றளவு 18 இஞ்சுக்கு மேலும் வளர்ந்து இருந்தால், பிளைவுட் தயாரிப்பு நிறுவனத்தார் நேரடியாக மரங்களை கொள்முதல் செய்து கொள்கின்றனர். தற்போது தோராயமாக ஒரு மரம் ரூ.2500 முதல் விற்பனையாகிறது.



* லாபம் தரும் தொழில்



-ரகு, விவசாயி, ராமபட்டினம்புதூர்:மலைவேம்பு விவசாயம் குறித்து ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரிடம் தெரிந்து கொண்டேன். அங்குள்ள தனியார் நாற்றுப் பண்ணையில் குளோனிங் ஹைபிரிட் மரக்கன்றுகளை பெற்றேன்.ஆறு ஆண்டுக்கு முன் 7 ஏக்கரில் 2 ஆயிரம் மரங்கள் நட்டு ரூ.5 லட்சம் செலவு செய்தேன். மரம் முழுவதும் வளரும் வரை இதில் வருவாய் இருக்காது. ஏழு ஆண்டுக்கு பின் இந்த மரத்தை வெட்டிய பிறகு மீண்டும் நாற்று வாங்க வேண்டியது இல்லை. வெட்டிய பகுதியிலிருந்து மீண்டும் மரம் வளரும். இப்படி 2 முறை விளைவிக்கலாம். பராமரிப்புச் செலவு குறைவு என்பதால் அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கிறது, என்றார்.



* எப்போதும் தேவை இருக்கும்



காகிதம், தீக்குச்சி, பிளைவுட் போன்றவற்றுக்கு பிரதான மூலப்பொருள் இந்த மலைவேம்புதான். எனவே இம்மரங்களுக்கு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும். இரண்டு ஆயிரம் மரங்கள் நடவு செய்தால் 7 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும் என்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X