கிடப்பில்- திருமண உதவி திட்டம் மூன்று ஆண்டுகளாக...மாவட்டம் முழுவதும் இளம்பெண்கள் காத்திருப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
05:35

விருத்தாசலம்-மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் மூலம் தாலிக்குத் தங்கம், நிதியுதவி வழங்காமல் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் குழந்தைகளுடன் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.



பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர்துடைக்கும் வகையில், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமணம், மணியம்மையார் விதவை மகள் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் விதவை மறுமணம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் போன்ற திருமண நிதியுதவி திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.அதற்கேற்ப, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களை மையப்படுத்தியே நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. பெண் கல்வியை ஊக்குவிக்க நிதியுதவி, அவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பெண்களிடம் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வகையில் கறவை மாடுகள், ஆடு, கோழிகள் உள்ளிட்ட திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன.குறிப்பாக, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு 8 கிராம் தாலிக்குத்தங்கம், 25 ஆயிரம் ரொக்கம், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கத்துடன் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. முதலில், 4 கிராம் தங்கத்துடன் திட்டத்தை துவக்கிய அப்போதைய முதல்வர் ஜெ., பின்னர் 8 கிராமாக உயர்த்தினார்.அவரது ஆட்சிகாலத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் எந்த தொய்வும் இல்லாமல் வழங்கினர். அவரது மறைவுக்குப் பின் தொய்வு ஏற்பட்டது. கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு தாலிக்குத்தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்த இளம்பெண்களுக்கு உதவிகள் கிடைக்காமல், குழந்தைகளுடன் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. கடலுார் மாவட்டம் முழுவதும், கடந்த 2019 ஜனவரி முதல், 2021 ஜூன் வரை ஒவ்வொரு ஒன்றியத்திலும், பட்டப்படிப்பு முடித்த பெண்கள், 10ம் வகுப்பு படித்த பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தாலிக்குத்தங்கம், நிதியுதவி பெற காத்திருக்கின்றனர்.



மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் ஒன்றியத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 603, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 404 பேர் உள்ளனர்.உதவித்தொகை, தாலிக்குத்தங்கம் எதிர்பார்த்து கடன்வாங்கிய பலரும், மூன்று ஆண்டுகளாக வட்டி கட்டும் அவலம் தொடர்கிறது.



பலருக்கு குழந்தைகள் பிறந்ததால், சமூக நலத்துறை அலுவலகத்திற்கு மாதந்தோறும் குழந்தைகளுடன் படையெடுக்கின்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், அ.தி.மு.க., ஆட்சிகால திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜெ., துவங்கிய தாலிக்குத் தங்கம், நிதியுதவியை காலதாமதம் இல்லாமல் செயல்படுத்த தி.மு.க., அரசு முனைப்பு காட்ட வேண்டும். மாவட்டத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X