ரோடெல்லாம் பெரும் குழிகள்: வாகனங்கள் சறுக்கல் பயணம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரோடெல்லாம் பெரும் குழிகள்: வாகனங்கள் சறுக்கல் பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:06

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கள்ளிப்பாளையம் ரோடு சந்திப்பு பகுதியில், பெரிய குழிகள் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது.பொள்ளாச்சி - கள்ளிப்பாளையம் ரோட்டினை, அண்ணா நகர், சுப்பையா நகர், கே.ஆர்.ஜி.பி., நகர் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் கள்ளிப்பாளையம் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். பல்லடம் ரோட்டில் இருந்து, கள்ளிப்பாளையம் செல்லும் ரோடு சந்திப்பு பகுதியில் பெரிய குழிகள் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:பல்லடம் ரோட்டில் இருந்து, கள்ளிப்பாளையம் செல்லும் ரோடு சந்திப்பு பகுதியில் ரோட்டின் நடுவே பெரிய குழிகள் உள்ளன. மழை காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்குகிறது. கவனமின்றி வரும் வாகன ஒட்டுனர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.மேலும், பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மையமாக இந்த இடம் மாறியுள்ளது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ரோட்டில் உள்ள குழியை மூடவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X