பி.எஸ்.என்.எல்., 'நெட்ஒர்க்' பிரச்னை: மலையில் வாடிக்கையாளர்கள் அவதி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பி.எஸ்.என்.எல்., 'நெட்ஒர்க்' பிரச்னை: மலையில் வாடிக்கையாளர்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:18

வால்பாறை:வால்பாறையில், 'நெட்ஒர்க்' பிரச்னையால் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். மலைப்பகுதியில், 11 இடங்களில் மொபைல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.வால்பாறையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பி.எஸ்.என்.எல்., சேவையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, வங்கிகள் அனைத்தும் பி.எஸ்.என்.எல்., சேவையை மட்டுமே நம்பியுள்ளன.இந்நிலையில், வால்பாறையில் நேற்று முன் தினம் இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்கிறது. இந்நிலையில், நேற்று காலை முதல், பல மணி நேரம், பி.எஸ்.என்.எல்., சேவை திடீரென துண்டிக்கப்பட்டது.இதனால், மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். குறிப்பாக, அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் தேவைக்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.மழை காலங்களில் அடிக்கடி பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X