பாசன கண்மாய்களை துார்வார ரூ.50 கோடியில் திட்டம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பாசன கண்மாய்களை துார்வார ரூ.50 கோடியில் திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:18

சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசன கண்மாய்கள், ஏரிகளை சீரமைக்க 50 கோடி ரூபாயில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. அதில் வேலை உறுதி திட்டத்தில் வயல்வரப்பு கட்டுதல், வரத்து கால்வாய் சீரமைப்பிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். கோடை உழவு உபகரணங்களை வாடகைக்கு விட வேண்டும். சாக்கோட்டையில் உழவர் சந்தை, கண்ணங்குடியில் நெல் கொள்முதல் நிலையம், இளையான்குடி, எஸ்.புதுாரில் காய்கறி, மிளகாய் சந்தைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரினர். இது குறித்து கலெக்டர் கூறுகையில் பொதுப்பணித்துறை சார்பில் பாசன கண்மாய், வரத்து கால்வாய்களை துார்வாரி செப்பனிட ரூ.50 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன், திட்ட இயக்குனர் வீரபத்திரன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X