'அகிலம் காப்பவளே அருள்புரிவாய் தாயே!' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'அகிலம் காப்பவளே அருள்புரிவாய் தாயே!'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:24

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுவதுடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அலங்கார வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று, ஆடி வெள்ளியை முன்னிட்டு, திரளான பக்தர்கள் கோவில்களில் வழிபட்டனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களின், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, கிருமிநாசினி வழங்கியும் வரிசையாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் மாரியம்மன் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிணத்துக்கடவுசூலக்கல் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்களுக்கு, கூழ், பச்சரிசி மாவு மற்றும் மஞ்சள் கயிறு ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டன.ஆனைமலைஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது. துளசி, ரோஜா, குண்டுமல்லி உள்ளிட்ட ஒன்பது வகை பூக்களால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு மூன்று கால பூஜை நடந்தது. கணபதிபாளையம் கவுமாரி பத்திரகாளியம்மன் கோவில், கோட்டூர் மற்றும் பழனியூர் மாகாளியம்மன் கோவில், அங்கலக்குறிச்சி மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பக்தர்களுக்கு, மஞ்சள் புடவைகள், வளையல்கள் வழங்கப்பட்டன. கோவில்களில் பக்தர்கள், 'தாயே பராசக்தி, அம்மா பராசக்தி, அகிலம் காக்கும் அன்னையே அருள்புரிவாய்,' என, மனமுருகி வழிபட்டனர்.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு, ஆடிவெள்ளிக்கிழமையான நேற்று காலை சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் காலை, 11:00 மணிக்கு சிறப்பு யாகபூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. வெள்ளி காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மஞ்சள்கயிறு, குங்குமம், பூ வழங்கப்பட்டது.உடுமலைஉடுமலை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. உச்சி கால பூஜையில், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்தியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த பூஜைகளில், பெருந்தேவித்தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் - நிருபர் குழு -.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X