மழைக்கு சரிந்த மரத்தால் பாதிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மழைக்கு சரிந்த மரத்தால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:28

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. ரோட்டில் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர். இந்நிலையில், மழை காரணமாக, பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் புளியம்பட்டி அருகே மரம் சரிந்து விழுந்தது.அவ்வழியாக சென்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், ரோட்டில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அரை மணி நேரத்துக்கு பின், போக்குவரத்து இயல்பானது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X