எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:35

ராமநாதபுரம்,--ராமநாதபுரம் எல்.ஐ.சி., முகவர் சங்கம் (லிகாய்) சார்பில் கிளை அலுவலகம்முன் கோரிக்கைகள் விளக்க கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். செயல்தலைவர் அழகேந்திரன், செயலாளர் கர்ணன்,மதுரை கோட்டதுணைச் செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., பங்குகளை தனியார் மையத்திற்கு விற்பதை கைவிட வேண்டும். முகவர்களுக்கு அடையாள அட்டை, கொரோனா முன்பணமாக ரூ.1லட்சம் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பரமக்குடிபரமக்குடி யுனைடெட் இன்சூரன்ஸ் அலுவலக வாயிலில் மதிய நேர உணவு இடைவேளையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.எல்.ஐ.சி., ஊழியர் சங்க பரமக்குடி கிளை தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். கிளை செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஹாரிஸ் பேசினார்.அப்போது மத்திய அரசின் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்திட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், யுனைடெட் இந்தியா, எல்.ஐ.சி., ஊழியர் சங்கத்தினர் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர். பரமசிவம் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X