பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:40

செஞ்சி : பனப்பாக்கம் பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.



செஞ்சி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியாண்டவர், திரவுபதியம்மன், அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் தமிழ் முறைப்படி நடந்தது. அதனையாட்டி, கடந்த 21ம் தேதி மாலை திருவிளக்கு மற்றும் ஆனை முகந்தோன் வழிபாடு நடந்தது.



22ம் தேதி காலை திருப்பள்ளியெழுச்சியும், காலை 9:30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் பெரியாண்டவர், திரவுபதி அம்மன், அம்மச்சார் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று, மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.



அதனையொட்டி, நேற்று காலை சொக்கநாதர், மீனாட்சியம்மன், மன்னார்சாமி, பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள சப்த முனிகளுக்கு சிறப்பு படையலிட்டு வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகையை ஒட்டி வனத்துறையினரும், செஞ்சி போலீசாரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X