கள்ளக்குறிச்சி நகரில் சிக்னல் சிஸ்டம்.. செயல்படுமா? போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:40

.கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் சிக்னலை முறையாக பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்ட தலைநகர் அந்தஸ்தை எட்டியுள்ள கள்ளக்குறிச்சி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாகி நெரிசல் ஏற்படுகிறது.ஆனால், நகரினுள் முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பு, மின்கம்பங்கள் மற்றும் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது தொடர்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.



அப்பகுதியில் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் சகட்டுமேனிக்கு செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.போக்குவரது நெரிசலை சீரமைக்கும் நடவடிக்கையாக நான்கு முனை சந்திப்பில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே சிக்னல் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



பஸ் நிலையம் அருகாமையில் நான்கு முனை சந்திப்பில் மின் சப்ளை, உரிய தொழில்நுட்ப மேம்பாடுகள் எதையும் ஏற்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிடந்த சிக்னல் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் நகர மக்கள் அதிருப்தி அடைந்தனர்.



ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீண்டும் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை காரணமாக நான்கு முனை சந்திப்பு, சாமியார் மடம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.சிக்னல் செயல்படுத்துவதற்கு வசதியாக நான்கு முனை சந்திப்பின் நடுவே அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து போலீஸ் நிழற்குடையும் அகற்றப்பட்டது.



அத்துடன் அரசு பெண்கள் பள்ளியின் மதில் சுவர் இடிக்கப்பட்டு இட நெருக்கடி இல்லாத பகுதியாக மாற்றப்பட்டது.ஆனால் சிக்னல் செயல்படுத்துவதற்கான எந்த ஒரு முன்னேற்பாட்டு பணிகளும் இதுவரை எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கலெக்டர், எஸ்.பி., என உயர்மட்ட அதிகாரிகளின் நேரடி பார்வை இருந்தும் இந்த ஒரு அடிப்படை வசதியைக் கூட கண்டும், காணாமலும் இருக்கின்றனர்.



இதனால் நான்கு முனை சந்திப்பில் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.எனவே, கள்ளக்குறிச்சியில் பல ஆண்டுகளாக வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்து வரும் சிக்னல் சிஸ்டத்தை முழுமையாக இயக்கி, போக்குவரத்து நெரிசலுக்கு கலெக்டர் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X