ஊரக வளர்ச்சித்துறை பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு! தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:42

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.



விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம் கஞ்சனுார் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக்குழுவினரால் டெரக்கோட்டா மற்றும் கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 3.09 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணி, மகளிர் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரித்தல் மையம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 44.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இந்த வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, கஞ்சனுார் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 14.08 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி. வெங்கந்துாரில் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 33.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சந்தை சாலை, வீராமூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 21.92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டார்.



பின்னர், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.அனைத்து ஊராட்சிகளிலும் கசிவு நீர் குட்டை அமைக்கும் பணி, பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள், சமுதாய உறுஞ்சு குழி அமைத்தல், மீன் வளர்ப்பு குட்டை அமைத்தல், நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி, கால்நடை தீவனம் வளர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள், சமுதாய திறந்தவெளி கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் துரிதப்படுத்தி தரமான முறையில் விரைந்து முடிக்க அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் கோபால், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண் இயக்குனர் பல்லவிதேவி பல்தேவ், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவின் பி நாயர், கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், புகழேந்தி, மணிக்கண்ணன், சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X