40 பவுன் நகை மீட்பு: ஒருவர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
40 பவுன் நகை மீட்பு: ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:45

ஒட்டன்சத்திரம்---ஒட்டன்சத்திரம் கருவூலக காலனி, லெக்கையன்கோட்டை, ஏ.பி.பி., நகர் பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன. டி.எஸ்.பி., சோமசுந்தரம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் எஸ்.ஐ., கணேசன் உட்பட போலீசாரைக் கொண்ட தனிப்படையினர் திருட்டு கும்பலை தேடி வந்தனர்.லெக்கையன் கோட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் டூவீலரில் வந்த சிவகங்கை ஆவாரங்காட்டை சேர்ந்த தங்கராஜ் 37, என்பவரை விசாரித்தனர். அவர், ஒட்டன்சத்திரம் பகுதியில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து 40 பவுன் நகைகள், இருசக்கர வாகனம், கத்தியை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X