408 போலீசாரிடம் இடம் மாறுதலுக்கான காரணங்கள் குறித்து எஸ்.பி., விசாரணை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
408 போலீசாரிடம் இடம் மாறுதலுக்கான காரணங்கள் குறித்து எஸ்.பி., விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:55

திண்டுக்கல்- -திண்டுக்கல்லில் பணிமாறுதல் வேண்டிய 408 போலீசாரிடம் எஸ்.பி., ரவளிப்பிரியா நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்று இடமாறுதல் காரணங்கள் குறித்து விசாரித்தார்.



மாவட்டத்தில் 35 சட்டம் ஒழுங்கு, 6 மகளிர் என 41 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவை தவிர்த்து எஸ்.பி., அலுவலகம், தனிப்பிரிவு போலீசார் என பலர் உள்ளனர்.இவர்களில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தோரை இடமாற்றம் செய்ய வேண்டும். இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ஏற்கனவே இடமாறுதல் பெற்று விட்டனர். போலீசார் முதல் எஸ்.ஐ., க்கள் வரை பலர் இடமாறுதல் செய்யப்பட வேண்டியுள்ளது.இந்நிலையில் 408 போலீசார் விருப்ப இடமாறுதலுக்கான கவுன்சிலிங் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் எஸ்.பி., ரவளிப்பிரியா தலைமையில், ஏ.டி.எஸ்.பி., வெள்ளைச்சாமி, டி.எஸ்.பி., மகேஷ் கலந்து கொண்டனர்.பணியிட மாற்றம் விரும்பிய ஒவ்வொரு போலீசாரையும் எஸ்.பி., நேரடியாக அழைத்து விசாரித்தார். போலீசார் இடமாறுதல் விரும்பும் இடம், அதற்கான காரணம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். போலீசார் விரும்பும் 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் தேர்வு செய்யப்படும். அதற்கான சம்மதத்தையும் கேட்டு பணிமாறுதல் உத்தரவு வழங்கினார். எஸ்.பி.,யே நேரடியாக போலீசாரை வரவழைத்து இது போன்ற இடமாறுதல் நடந்தது இதுவே முதல் முறை.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X