ஆசையை துாண்டி பண  மோசடி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஆசையை துாண்டி பண  மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:56

திண்டுக்கல்,- -'சில ஆயிரங்களை கொடுத்து ஆசைகளை துாண்டிவிட்டு, லட்சக்கணக்கில் மோசடி நடப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.முகநுால் உட்பட சமூக வலைத்தளங்களில் முதலீடு இன்றி சம்பாதிக்க வேண்டுமா என்பன போன்ற விளம்பரங்களை பதிவிட்டு ஒரு வாட்ஸ் ஆப் லிங்கை பதிவிடுகின்றனர்.அதை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட குரூப்பிற்கு சென்றால், ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால், ஆட்களை சேர்த்தால் பணம் கிடைக்கும் என நம்ப வைக்கின்றனர். நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் ஏமாறுவோர் எதிர்பார்க்கும் பணம் சொன்னது போலவே வந்துவிடுகிறது.இது தொடர்ந்து நடக்கிறது. பின்னர் திடீரென ஒருநாள் லட்சக்கணக்கில் சுருட்டிச் செல்கின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து மக்கள் ஏமாறுகின்றனர். இதில் படித்தவர்களே ஏமாறுகின்றனர். விழிப்புணர்வுடன் இருப்பதே இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்கின்றனர் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X