சோதனையில் வெற்றி 'கெத்தா... உள்குத்தா' | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
சோதனையில் வெற்றி 'கெத்தா... உள்குத்தா'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:58

வத்தலக்குண்டு--வத்தலக்குண்டில் நடந்த சோதனையில் தனிப்படையினர் கண்டறிய முடியாத குட்கா, போலி பீடி பண்டல்களை உள்ளூர் போலீஸ் கைப்பற்றி கெத்து காட்டியுள்ளது.வத்தலக்குண்டில் குட்கா, போலி பீடி பண்டல்கள் இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை மாவட்ட தனிப்படை போலீசார் நகர் முழுவதும் அலைந்து திரிந்தனர். எங்கும், எதுவும் சிக்காததால் வெறும் கையுடன் திரும்பினர்.அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்திற்குள் வத்தலக்குண்டு எஸ்.ஐ., ஷேக் உள்ளிட்ட போலீசார் களமிறங்கினர். எழில்நகரில் தமிழரசி என்பவர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா, போலி பீடி பண்டல்கள், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கிய இஸ்மாயில் மற்றும் தமிழரசியை கைது செய்தனர். தனிப்படைக்கு கிடைக்காதவை, உள்ளூர் போலீசுக்கு கிடைத்தது கெத்தா, உள்குத்தா என போலீசார் விவாதித்துக் கொண்டனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X