கடையிலே இருக்கு...காலாவதி சரக்கு! ஊரடங்கால் கடைகளில் பொருட்கள் தேக்கம்: பார்த்து வாங்கணும் பாக்கெட் உணவுகளை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜூலை
2021
03:41
பதிவு செய்த நாள்
ஜூலை 24,2021 03:40

கோவை:கொரோனா ஊரடங்கு காலத்தில், பல மாதங்களாக விற்பனையாகாத பாக்கெட் உணவுப் பொருட்கள், காலாவதியான நிலையில், இப்போதும் படிக்காத பாமர மக்களிடம் விற்கப்படுவதாக புகார்கள் குவிகின்றன.



கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கி, தமிழகத்தில் பல மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது.இடையிடையே சில மாதங்கள், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவை திறக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின், கடந்த ஆறாம் தேதியிலிருந்துதான் தளர்வு காரணமாக, இவை திறக்கப்பட்டுள்ளன.


மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில், பெரும்பாலான பாக்கெட் உணவுப் பொருட்கள், இடைப்பட்ட காலத்தில் காலாவதியாகியுள்ளன. அவற்றைக் கண்டறிந்து, அழித்திருக்க வேண்டும்.அல்லது அவற்றை கடையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கடை நிர்வாகங்களின் பொறுப்பாகும்.இத்தகைய பெரிய கடைகளில் ஆய்வு செய்து, காலாவதி செய்யப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.ஆனால் எந்த பெரிய கடையிலும், இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் பெரிய மற்றும் சிறிய அளவிலான டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில், காலாவதியான பாக்கெட் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக, நுகர்வோர் பலரும் புகார் எழுப்புகின்றனர்.


படித்தவர்கள், விழிப்புணர்வு இருப்பவர்கள் பெரும்பாலும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவற்றைப் பார்த்து வாங்குகின்றனர். தெரியாமல் வாங்கிப் போன பலரும், வீடுகளில் இவற்றைப் பார்த்து, திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.ஆனால் படிக்காத பாமர மக்கள் அனைவரும் இவற்றைப் பார்க்கத் தெரியாமல், கொடுப்பதை வாங்கிக் கொண்டு போய், பயன்படுத்துகின்றனர். விளைவுகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. எனவே, இதுகுறித்து பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.



டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் பெரிய மளிகைக் கடைகள் நடத்துவோர், காலாவதி பொருட்கள் விற்பதை, தாமாக முன் வந்து தவிர்ப்பது நல்லது.'தேதி பாருங்க...புகார் அனுப்புங்க'கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''பாக்கெட் உணவுப் பொருட்கள் அனைத்திலும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கண்டிப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.



பொதுமக்கள் அதைப் பார்த்து வாங்க வேண்டும். வணிகர்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் நடத்துவோர், இத்தகைய பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது குற்றமாகும். காலாவதி பொருட்களை யாராவது விற்பனை செய்தால், 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதுகுறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு, உரிய பதிலும் அனுப்பப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
24-ஜூலை-202110:12:14 IST Report Abuse
S. Narayanan எல்லாம் பொது மக்கள் தான் செய்யணுமா. அரசு அதிகாரிகள் செய்ய மாட்டார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X