ஊர்ப்புற நுாலகர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஊர்ப்புற நுாலகர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி!
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
03:58

கோவை;நுாலக ஆணைக்குழு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்க கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஊர்ப்புற நுாலகப்பணியாளர்கள், கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபனை நேற்று சந்தித்து, மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்று கொண்ட பதிவவாளர், இவர்களை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக அனைவரையும் இணைக்க உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழ்நாடு பொது நுாலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு மாநில இணைச்செயலாளர் நாகராஜன் கூறுகையில், ''இது எங்களின், 14 ஆண்டுகள் கோரிக்கையாகும். எங்கள் கோரிக்கையை இணைப்பதிவாளர் ஏற்று சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்க உத்தரவிட்டதில், அனைவருக்கும் மகிழ்ச்சி,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X