குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் | கடலூர் செய்திகள் | Dinamalar
குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
05:43

கடலுார் : கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.



கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவர்கள், குழந்தை உளவியல் (அ) மனநல மருத்துவம் (அ) சட்டம் (அ) சமூக பணி (அ) சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.



விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாமல், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும். குழந்தைகள் நலக் குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இரு முறை மட்டுமே பதவி வகிக்கலாம்.விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 312, 317 இரண்டாவது தளம், கலெக்டர் அலுவலகம், கடலுார் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X