மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள்... 24 சதவீதம்! இதுவரை 5 லட்சம் பேரை கடந்துள்ளது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
05:45

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 24 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.



தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரத்து 378 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசி போட்டவர்கள் பட்டியலில் கடலுார் மாவட்டம் 11வது இடத்தில் உள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் 500 முதல் 800 பேர் வரை கொரோனா தொற்று பாதித்தனர். தொற்றால் குறைய துவங்கி தற்போது தினசரி பாதிப்பு 90க்கு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 67 ஆயிரத்து 688 பேருக்கு பரிசோதனை செய்ததில் 59 ஆயிரத்து 824 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 803 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இறப்பு சதவீதம் 1.34 ஆகும். 9 லட்சத்து 7 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று இல்லை.



மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் உட்பட 10 அரசு மருத்துவமனைகள், 71 ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, என்.எல்.சி., மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.மருத்துவக் குழுவினர் கிராமங்கள் தோறும் நேரடியாக பொது மக்களை சந்தித்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். தினசரி 5,000 பேர் வரை தடுப்பூசி போடப்படுகிறது.



கடலுார் மாவட்டம் முழுவதும் 21 லட்சம் பேர் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள். இதில், நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 4,992 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 4 லட்சத்து 20 ஆயிரத்து 431 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 84 ஆயிரத்து 498 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.



மாவட்டத்தில் இது வரை 24 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், ஆண்கள் 2 லட்சத்து 79 ஆயிரத்து 147 பேர், பெண்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 733 பேர், இதரர் 49 பேர். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் 4 லட்சத்து 30 ஆயிரத்து 183 பேர். கோவாக்சின் 73 ஆயிரத்து 79 பேரும், ஸ்புட்னிக் 1,667 பேரும் போட்டுள்ளனர். இதில், 18 முதல் 44 வயது வரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 43 பேர், 45 முதல் 60 வயது வரை 1 லட்சத்து 76 ஆயிரத்து 79 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 95 ஆயிரத்து 607 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.



அதிகபட்சமாக கடலுாரில் அரசு தலைமை மருத்துவமனை, அண்ணா விளையாட்டரங்கம் மையங்களில் 34 ஆயிரத்து 798 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 ஆயிரத்து 864 பேருக்கும், என்.எல்.சி., மருத்துவமனையில் 20 ஆயிரத்து 794 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X