இலவச பயணத்தில் மரியாதை இல்லை பஸ் நடத்துனர்கள் மீது பெண்கள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
06:01

மணலி : மாநகர பேருந்துகளில் இலவச டிக்கெட்டில் பயணிக்கும் பெண்களை, நடத்துனர்கள் சிலர் மரியாதையின்றி தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்துள்ளது.



\ தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், மாநகர பேருந்துகளில், பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, சாதாரண பேருந்துகளில், பெண்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் எத்தனை பேர் பயனடைகின்றனர் என்பதை அறியும் வகையில், அவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படுகிறது.இந்நிலையில், சென்னை மாநகர பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் சிலர், மரியாதையுடன் நடத்தாததோடு, தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது



. மணலி - பிராட்வே வழித்தடத்தில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, பெண்கள் கூறியதாவது: இலவச பயணச்சீட்டில் செல்வதால், காலியாக இருக்கும் ஆண்கள் இருக்கையில் அமர, சில நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை. தவிர, பயணச்சீட்டை சரியாக கைகளில் கொடுப்பதில்லை. கேட்டால், மனம் புண்படும்படி பேசுகின்றனர்.பேருந்துகளும் மிக அரிதாக இயக்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இலவச பயணச்சீட்டு துவங்கியதில் இருந்து, சண்டை போடாமல் பயணம் செய்ததே இல்லை எனலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதை கவனித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களுக்கென தனியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X