விவசாயி மர்ம சாவு; போலீஸ் விசாரணை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விவசாயி மர்ம சாவு; போலீஸ் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
06:14

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நிலத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த விவசாயி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் அடுத்த ஈச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 50; விவசாயி. மனைவி தனலட்சுமி. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது நிலம் கல்லடிகுப்பத்தில் உள்ளது.நேற்று முன்தினம் மாலை நிலத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. ஒரு சில நாட்களில் நிலத்திற்குச் சென்றால் இரவு தண்ணீர் பாய்ச்சி விட்டு மறுநாள் காலை வருவது வழக்கம். இதனால் காலையில் வருவார் என காத்திருந்தனர்.



நேற்று காலை உடலில் காயங்களுடன் நிலத்தில் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்றோர் தெரிவித்தனர்.பெரியதச்சூர் போலீசில் சிவக்குமார் மனைவி தனலட்சுமி புகார் கொடுத்தார். சிவக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் கோபு விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X