சரநாராயண பெருமாள் கோவிலில் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் | கடலூர் செய்திகள் | Dinamalar
சரநாராயண பெருமாள் கோவிலில் தாயாருக்கு சிறப்பு அலங்காரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
06:18

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.



பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளி மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 9:00 மணிக்கு மூலவர் தாயார் , உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 4:30 மணிக்கு 1008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X