பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக 300 பேரிடம் ரூ. 5 கோடி மோசடி; நிதி நிறுவனம் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
06:21

புதுச்சேரி : புதுச்சேரியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, 300 பேரிடம், ரூ. 5 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நிதி நிறுவனம் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.



கோயம்புத்துார் பி.ஆர்.புரம், பீலமேடு பகுதியில் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் யு.டி.எஸ்., (யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ்) நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் கீழ் யுனிவர்சல் சிட் பண்ட்ஸ், யுனிவர்சல் டிரேடிங் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களும் இயங்கின. இதன் கிளைகள் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தது.யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ் (யு.டி.எஸ்) கிளை அலுவலகம், புதுச்சேரி இந்திரா சதுக்கம், சக்தி டவர்ஸில் இயங்கியது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், 10 மாதத்தில் தங்களின் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர்.



ஒரு லட்சம் பணம் செலுத்தினால், மாதம் ரூ. 20 ஆயிரம் விதம், 10 மாதத்தில் ரூ. 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி, லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டம், நவமணி நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வேல்முருகன் மனைவி சுதா, 38; அவரது உறவினர்கள் சேர்ந்து, 2018 செப்டம்பரில் ரூ. 40.40 லட்சம் முதலீடு செய்துள்ளனர்.



அதேபோல், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த 300 பேர் ரூ. 5 கோடி வரை முதலீடு செய்தனர். முதல் சில மாதங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுத்த அந்நிறுவனம், அதன்பின்பு வழங்கவில்லை. 2019ல் அந்நிறுவனம் மூடப்பட்டது.அதன்பிறகு கொரோனா காரணமாக நிறுவனத்தை திறக்க முடியவில்லை. பணத்தை திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். பல மாதங்கள் கடந்தும் பணம் கிடைக்காததால், சுதா புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.



அதன்பேரில், வழக்குப் பதிந்து, பணத்தை கொடுத்து ஏமாந்த 300 பேரையும் வழக்கில் இணைத்தனர். இன்ஸ்பெக்டர் நியூட்டன், யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ், இயக்குநர் கனகராஜ் ஆகியோர் மீது, மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X