கிணற்றில் ஆண் சடலம் மீட்பு | சேலம் செய்திகள் | Dinamalar
கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:02

இடைப்பாடி: கொங்கணாபுரம், கோம்பைக்காடு சாலையோரம் வறண்ட கிணற்றில், நேற்று துர்நாற்றம் வீசியது. மக்கள் பார்த்தபோது ஆண் சடலம் இருந்தது. அவர்கள் தகவல்படி, கொங்கணாபுரம் போலீசார், இடைப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர். தொடர்ந்து, சடலத்தை மீட்டனர். விசாரணையில், அவர், கோணங்கியூர் ரவி, 45, என தெரிந்தது. இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ரவிக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கால் சொந்த ஊர் வந்த அவர், திரும்ப வேலைக்கு செல்வதாக கூறி, கடந்த, 11ல் வீட்டிலிருந்து சென்றார். வேலைக்கு சென்றுவிட்டதாக குடும்பத்தினர் நினைத்திருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தவறி விழுந்து இறந்தாரா, யாராவது கொலை செய்தனரா என, விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X