விபத்தில் விவசாயி பலி; சிறுவன் படுகாயம் | சேலம் செய்திகள் | Dinamalar
விபத்தில் விவசாயி பலி; சிறுவன் படுகாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:03

ஆத்தூர்: ஆத்தூர், அம்மம்பாளையம் ஊராட்சி, காந்திபுரத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன், 50. இவர் நேற்று தலைவாசலில் உரம் வாங்கிக் கொண்டு, டிவிஎஸ் - எக்ஸ்.எல்., மொபட்டில் வந்துகொண்டிருந்தார். காலை, 10:00 மணிக்கு காந்திபுரம் பிரிவு சாலையில் சென்றபோது, ஆத்தூரில் இருந்து தலைவாசல் நோக்கி, 'ஹீரோ - ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த, கூடமலையை சேர்ந்த அபிநாத், 18, மொபட் மீது மோதிவிட்டார். அதில் படுகாயமடைந்த ஜெயராமன், அபிநாத், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜெயராமன் உயிரிழந்தார். அபிநாத், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆத்தூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X