பவானிசாகர் அணைக்கு 14,938 கன அடி நீர்வரத்து: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | ஈரோடு செய்திகள் | Dinamalar
பவானிசாகர் அணைக்கு 14,938 கன அடி நீர்வரத்து: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:39

பவானிசாகர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில், இரண்டு நாட்களாக, மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம், பில்லூர் அணை நேற்று நிரம்பியதால், ?? ஆயிரம் கனஅடி உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு வருவதால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 2,926 கனஅடியாக இருந்த வரத்து, 14 ஆயிரத்து, 938 கனஅடியாக நேற்று மாலை அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 98 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 26.9 டி.எம்.சி.,யாக இருந்தது.


வெள்ள அபாய எச்சரிக்கை: பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடியை தொட்டவுடன், உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்படும். இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல வேண்டும். கால்நடை மற்றும் உடமைகளை பாதுகாத்து கொள்ளுமாறு, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரையோர கிராமங்களான சத்தியமங்கலம், பகுடுதுறை, தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், வருவாய் மற்றும் பவானிசாகர் பேரூராட்சி, சத்தி நகராட்சி ஊழியர்கள், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X