உடற்தகுதி தேர்வுக்கு 'போலீஸ் கட்டிங்': ஆண் தேர்வாளர்களுக்கு எஸ்.பி., அறிவுரை | சேலம் செய்திகள் | Dinamalar
உடற்தகுதி தேர்வுக்கு 'போலீஸ் கட்டிங்': ஆண் தேர்வாளர்களுக்கு எஸ்.பி., அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:41

சேலம்: போலீஸ் உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள், தலைமுடியை போலீஸ் போன்று திருத்தம் செய்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வரும், 26ல் போலீஸ் உடற்தகுதி தேர்வு தொடங்குகிறது. இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 480 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 3,913 பேர் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் வெளியிட்டுள்ள அறிக்கை: போலீஸ் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வருவோர், முக கசவம் அணிவது கட்டாயம். இரு முக கவசம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும். நான்கு நாளுக்கு முன் எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தொற்று உறுதியாகி இருந்தால், அதுகுறித்த சான்றிதழை, தேர்வு குழுவிடம் வழங்க வேண்டும். சட்டை, டீ சர்ட்டில், எழுத்து, லோகோ இருக்கக்கூடாது. கர்ப்பிணியர் தேர்வில் பங்கேற்க இயலாதது குறித்து, அரசு மருத்துவர் சான்றிதழை, தேர்வு குழு முன் ஆஜராகி வழங்க வேண்டும். தலைமுடியை போலீஸ் போன்று திருத்தம் செய்து, இளைஞர்கள் வரவேண்டும். தேர்வு அழைப்பு கடிதத்துடன், போட்டோவுடன் கூடிய அரசு அங்கீகார அடையாள அட்டை எடுத்து வர வேண்டும். முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவ படையினர், விளையாட்டு வீரர்கள், திருநங்கையர், சான்றிதழ்களுடன் வந்து தங்களின் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X