20,500 கனஅடி உபரிநீர் கபினி அணையில் திறப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
20,500 கனஅடி உபரிநீர் கபினி அணையில் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:41

மேட்டூர்: கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால், வினாடிக்கு, 20 ஆயிரத்து, 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று முன்தினம், 73.47 அடியாக இருந்த நிலையில், 73.07 அடியாக நேற்று, சரிந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரம் அடைந்ததால், நேற்று கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 20 ஆயிரத்து, 796 கனஅடி, கபினி அணைக்கு, 23 ஆயிரத்து, 129 கனஅடி நீர் வந்தது. கே.ஆர்.எஸ்.,ல் இருந்து, 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடியாக இருந்த கபினி உபரிநீர் திறப்பு, மதியம், 20 ஆயிரத்து, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இரு அணைகளில் வினாடிக்கு, 25 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றுவதால், இன்று மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X