தமிழகம் முழுவதும் 'குட்கா' சோதனை: 2,100 பேர் கைது; 10 டன் பறிமுதல் | சேலம் செய்திகள் | Dinamalar
தமிழகம் முழுவதும் 'குட்கா' சோதனை: 2,100 பேர் கைது; 10 டன் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:41

சேலம்: தமிழகம் முழுதும் போலீசார் நடத்திய சோதனையில், 'குட்கா' விற்றதாக, 2,100 பேர் கைது செய்யப்பட்டு, 10 டன் புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் சிறிய, பெரிய, மொத்த வியாபாரிகளை, கைது செய்யும் நடவடிக்கையை, தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் காலை முதல், நேற்று வரை போலீசார் மேற்கொண்டனர். இதன்படி சேலம் மாவட்டத்தில், 31 பேர், மாநகரில் ஆறு பேர்; நேற்று, மாவட்டத்தில், 20 பேர், மாநகரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும், 1,600 பேரை கைது செய்து, 8 டன் குட்கா பொருட்கள்; நேற்று மதியம் வரை, 500 பேர் கைது செய்யப்பட்டு, 2 டன் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


'கடத்தலை தடுக்க வேண்டும்': 'குட்கா' சோதனையில், கைது எண்ணிக்கை அதிகரித்தாலும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு, குட்கா வரும் வழிகள் இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு பெங்களூரு, ஓசூரில் குட்கா இருப்பு வைக்கப்படுகிறது. அங்கிருந்து காய்கறி, பழங்கள், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் மறைத்து, முக்கிய நகரங்களுக்கு கடத்தப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்ட போலீசாருடன், போதை பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைகோர்த்து செயல்பட்டால் மட்டுமே, கடத்தலுக்கு முடிவு கட்ட முடியும்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X