செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
22:52

கருத்தரங்கம்மயிலம்: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லுாரியில் நுாலகத்துறை சார்பில் நடந்த இணைய தள கருத்தரங்கிற்கு, கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சுவாமிகள் கருத்துரையாற்றினார்.
கருத்தரங்கில், மாநில சுவடி பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், உத்திராடம், ராம்குமார் உட்பட பலர் கருத்துரை வழங்கினர்.விழிப்புணர்வு முகாம் கண்டமங்கலம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து கண்டமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வரவேற்றார். டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், குணசேகரன் கண்டமங்கலம் பி.டி.ஓ., சிவக்குமார், மாநில வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் வெங்கடேசன் உட்பட மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை பெற்றோர் அல்லது உறவினர்கள் எவ்வாறு கையாள்வது குறித்து பேசினார்.சப் இன்ஸ்பெக்டர் பிரபு நன்றி கூறினார்.பால் குட ஊர்வலம்ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி, நடந்த நிகழ்ச்சியில் மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.அதேபோல் புதுவெங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்ததைத் தொடர்ந்து, கோவிலுக்கு முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.பா.ம.க., ஆலோசனைக் கூட்டம்விழுப்புரம்: மத்திய மாவட்ட பா.ம.க., சார்பில் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.மாநில அமைப்பு துணைச் செயலாளர் பழனிவேல், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், துரை சுப்ரமணியன், சுரேஷ்குமார், தொகுதி செயலாளர்கள் சினிவாசன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் ராம்குமார் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், ராமதாஸ் பிறந்த நாளை பசுமை தாயகம் நாளாக கொண்டாடுவது. உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அ.தி.மு.க.,வினர் மனுதிருக்கோவிலுார்: கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது முகையூர் ஒன்றியத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நடத்தை விதி முறையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது பணிகளைத் தொடர அனுமதி கிடைக்காததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக துவங்க அனுமதிக்கவேண்டும் எனக் கோரி முகையூர் ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, இளங்கோவன், தனபால்ராஜ் ஆகியோர் பி.டி.ஓ., சாம்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சுவாமிநாதன், நிறுவன தலைவர் செஞ்சி ராஜா கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஏழுமலை, இயற்கை விவசாய சங்கத் தலைவர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.பாரம்பரிய விதை பகிர்வு விழாஅவலுார்பேட்டை: தளிர் இயற்கை வழி வேளாண்மை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவிற்கு, திருவண்ணாமலை வள்ளலார் திருச்சபை நிர்வாக இயக்குனர் சாது ஜானகிராமன், டாக்டர் சாயிபிரசன்னா, முகில்வண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் பல வகையான பாரம்பரிய நெல், வேர்க்கடலை மற்றும் நவதானிய விதைகளைக் கொண்டு வந்து விற்பனைக்கு வைத்திருந்தனர்.சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியர் நிர்மலகுமாரி, அசோக்குமார், செல்வராஜ், மகாராஜன், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.பா.ஜ., நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்செஞ்சி: பா.ஜ., சார்பில் 'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்' பிரசார நிகழ்ச்சிக்கு, நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் செஞ்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் தலைமை தாங்கினார். செஞ்சி நகர தலைவர் தங்க ராமு வரவேற்றார். கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், அமைப்புச் செயலாளர் குணசேகரன் சிறப்புரையாற்றினர்.மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன், ஜெயக்குமார், ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீரங்கன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, இளைஞரணி மாவட்ட தலைவர் நரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.குரு வணக்க நிகழ்ச்சிகள்ளக்குறிச்சி: ராஜா நகர் விவேக் அகாடமி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கோபி தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பாலாஜி வரவேற்றார். தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார். விவேக் அகாடமி நிறுவனர் விவேக் வாழ்த்திப் பேசினார். கோட்ட பொறுப்பாளர்கள் கதிர்வேல் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.விழாவில், வியாசர் மற்றும் சரஸ்வதி சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி குரு வணக்கம் செலுத்தினர்.காப்பீட்டு திட்டம் துவக்கம்விழுப்புரம்: எல்.ஐ.சி.,யின் புதிய ஆரோக்கிய ரக்ஷக் அறிமுக விழாவிற்கு, கிளை மேலாளர் திருப்புகழ் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் (வணிகம்) சீத்தாராமன் வரவேற்றார். பட்டய கணக்காளர் ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.வளர்ச்சி அதிகாரி சிவராமன் மற்றும் அனைத்து வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கலந்துகொண்டனர். அலுவலக நிர்வாக அதிகாரி ஆதிமூலம் நன்றி கூறினார்.தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்விழுப்புரம்: அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச., துணைத் தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். மாவட்ட தொ.மு.ச., கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம், சி.ஐ.டி.யூ., தலைவர் முத்துக்குமரன், துணைத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச., பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி, பொருளாளர் ஜான் போஸ்கோ அமைப்பு செயலாளர் வேலு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை கண்டித்தும், மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் பேசினர்.டி.ஆர்.ஓ., ஆய்வுகச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் காந்திநகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மனு அளித்திருந்தனர். இம்மனுக்கள் மீது, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சாந்தி, தாசில்தார் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காந்தி நகர் பகுதியில் ஆய்வு செய்தனர்.அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்சின்னசேலம்: அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சர் மோகன், மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்றார். கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராகேஷ், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X